உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

அமெரிக்காவில் பூகம்பம்

0 கருத்துகள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 5.1 ரிச்டர் அளவிலான பூகம்பம் இடம்பெற்றுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளி இரவு இப்பூகம்பம் ஏற்பட்டதால் பல கட்டங்கள் குலுங்கின.


லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து 32 கிலோமீற்றர் தூரத்திலுள்ள லா ஹப்ரா நகரில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

' வேடிக்கை பார்த்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்"

0 கருத்துகள்


யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவரும் இளம் குடும்பஸ்தருமான அமலன் மைதானத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை வேடிக்கை பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பொலிஸார் இருவரும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  விமலசேன தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம்  பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
பொன் அணிகளின் போர் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டியின் போது அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம்  அமலனின் கொலைச் சம்பவத்தின் போது, பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது அடித்துக் கொலை செய்த நபர்களை கைதுசெய்யுமாறு கூறியபோது பொலிஸார் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளனர்.

அவ்வாறு வேடிக்கை பாத்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று ஊடகவியலாளர்களினால்  கேள்வி எழுப்பட்டது.
 
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
சம்பவம் இடம்பெற்ற போது இரு பாடசாலை அதிபர்களும் சமுகமளித்திருந்தனர். ஆனால்  மாணவர்கள் மோதும் போது அதைத்தடுக்காமல்  பார்த்துக் கொண்டே நின்றுள்ளனர். அவர்களை தடுப்பதற்கு இரு பாடசாலை அதிபர்களும் முன்வரவில்லை.
 
அதேவேளை, இரு தரப்பினரும் மோதும் போது பொலிஸார் வேடிக்கை பார்த்ததாக அவ்விடத்தில் நின்றவர்கள் கூறியதற்கு இணங்க பொலிஸார் மீது விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. 
இந்நிலையில், இரு பொலிஸார் விசாரணையின் பின்னர் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
 
இதேவேளை அமலனின் கொலை சாட்சியங்களான அவரது நண்பர்களுக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் புலனாய்வு மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
 
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். சம்பவம் நடை பெற்ற அன்றைய தினம் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது சம்பவத்தினை பார்த்துக் கொண்டு நின்ற 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டோம்.
அதேவேளை, இரு இளைஞர்கள் மாத்திரமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும், மல்லாகம் நீதிமன்றத்திலும் சாட்சியமளித்ததுடன், தாக்குதல் சம்பவத்தினை மேற்கொண்டவர்களை நீதிமன்றில் அடையாளம் காட்டியுள்ளனர்.
 
இந்த வகையில், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More »

மாகாண சபைத் தேர்தல் - 55 வீத வாக்களிப்பு

0 கருத்துகள்
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில்  55 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள்
இயக்கத்தின்(கபே அமைப்பு) பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

Read More »

ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய - பாலை வன ரோஜா

0 கருத்துகள்


ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு சினிமா படம். இந்த படத்தில்  ஒரு பெண் வீட்டில் இருக்கும் கஷ்டத்தால் சவூதி போகிறாள்  அங்கெ போய் படும் கஷ்டத்தை அனுபவிப்பதை தெளிவு படுத்துகின்ற ஒரு படம்

நீங்கள் இந்த லிங்கை கிளிக் பண்ணுங்கள் 

http://www.thiruttuvcd.me/2014/03/25/palaivana-roja-2013-tamil-movie-watch-online/

Read More »

இறைவனிடம் கேட்டு பாருங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

0 கருத்துகள்


அல்லாஹ்வின் (எல்லோருக்கும் இறைவன் ) கொடை வள்ளல் என்று விளக்குகிறார்  நாகூர் ஹனீபா


Read More »

ஹிஜாப் விவகாரம்: 7 பேருக்கு நோட்டீஸ்

0 கருத்துகள்


முஸ்லிம்களின் உடையான ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு நாவல ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகள் 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதியரசர்கள் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.
ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு நாவல ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அந்த வித்தியாலயத்தில் பயிலும் 11 வயது மாணவியான பாத்திமா ஹகீனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க,பிரியசத் டெப் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதிகளாக வித்தியாலயத்தின் அதிபர் தக்சில நயன பெரேரா துணை அதிபர் ஹேமமாலி 7 ஆம் வகுப்பாசிரியை திருமதி நடோதுன்ன ஆகியோருடன் மாகாண கல்வி பணிப்பாளர், கல்வியமைச்சர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அந்த மாணவி தனது மனுவில் பாடசாலை அதிபரால் தான் தீவிரமான மனக்கஷ்டங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தனது சமய ஆசார முறைப்படி அணியும் ஆடையை அணியக்கூடாது என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் இந்த அதிபர் முஸ்லிம் மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கு எதிரான மனேநிலையில் உள்ளவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வித்தியாலய அதிபரின் இந்த நிலைப்பாடு கல்வி அமைச்சினால் டிசெம்பர் 12 ஆம் திகதி அனுப்பப்பட்ட சுற்று நிருபத்திற்று எதிரானது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சுற்று நிருபத்தின்படி எல்லா தேசிய, மாகாண, தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் தங்கள் சமய ஆசாரத்திற்கு அனுசரணையான பாடசாலை உடையை அணிந்து வரலாம் என்று கல்வி அமைச்சில் செயலாளரால் கூறப்பட்டிருக்கிறது.
மனுவை விசாரணைக்கு எடுத்து நீதியரசர்கள் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் வழக்கை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

Read More »

ஹெய்ல்ஸின் அபார சதத்துடன் இலங்கை வெற்றிகொண்டது இங்கிலாந்து

0 கருத்துகள்
இலங்கை அணியுடனான உலக இருபது20 போட்டியில் ஹெய்ல்ஸின் அபார சதத்துடன் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களால் அதிரடி வெற்றிபெற்றது.


சித்தகொங்கில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. 

மஹேல ஜயவர்த்தன 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றார். டில்ஷான்  55 (47b 6X2 4X4) ஓட்டங்களைப் பெற்றார். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 145 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 190 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டினால் இலங்கை அணியை வெற்றிகொண்டது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் ஹெய்ல்ஸ் 64 பந்துகளில் 6 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்களை விளாசினார்.

பந்துவீச்சில் குலசேகர மாத்திரம் சிறப்பாக செயற்பட்டு 4 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு  4 விக்கெட்களை கைப்பறினார்.

Read More »

மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

0 கருத்துகள்
நாளை நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சுகள் குறிப்பிடுகின்றன.
வாக்களிப்பு நிலையங்களாக பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.
இன்றைய தினம் வழங்கப்படும் விடுமுறைக்குப் பதிலாக வேறொரு  விடுமுறை நாளில் பாடசாலை கல்வி செயற்படுகளை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தல் வாக்கெண்ணும்  நிலையங்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ள பாடசாலைகள், கல்யியற் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு நேற்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More »