உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

2 அடி உயரம் கொண்ட கொலம்பிய மனிதர்

கொலம்பிய தலைநகர் போகோதாவில் எட்வர்ட் ஹெர்னான்டஸ்(28) என்ற  நபர்  2 அடி (27 அங்குலம்) மட்டுமே உயரம் கொண்டவராம். இவர்  குழந்தைகள் அணியக்கூடிய உடைகளே அணிகிறாராம்.

 
இவரை முதல் முறை பார்ப்பவர்கள் பொம்மை என்றே நினைப்பார்களாம். இவரின் அன்றாட தேவைக்கு, இளைய சகோதரர் தான் எப்போது உதவிக்கரமாக இருக்கிறார்களாம். இந்த குள்ள மனிதருக்கும் ஓர் பெரிய கனவு இருக்கிறதாம்.

சொந்தமாக பண்ணை, காதலி இருக்க வேண்டும். அதோடு 'ஜீப்'பை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்பதேயாகும். இவை ஒருபுறம் இருந்தாலும் உலகிலேயே மிகச்சிறிய குள்ள மனிதர் என்ற கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. 

சீனாவில் வசித்த பிங்பிங் என்பவரே இந்த சாதனைக்குரியவராக இருந்தார். அவர் மரணம் அடைந்த பிறகு எட்வர்ட்   உயரம் குறைந்த சாதனை மனிதராக  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



0 கருத்துகள்: