உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

ஆப்கானிஸ்தான் அபார பந்து வீச்சு: சங்காவின் அரைச் சதத்துடன் இலங்கை 253 ஓட்டங்கள்

ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 253  ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இலங்கை அணியில் குமார் சங்கக்கார மாத்திரம் அதிகூதலாக 76 ஓட்டங்களை பெற்றார்.
 
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்காகிஸ்தான் ஆகிய 5 அணிகள் இடையிலான 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறும்.
 
அந்த வகையில் இன்றைய  7வது லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.
 
அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திரிமான 5 ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க குசேல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
 
அடுத்து வந்த சங்கக்கார நிதானமாக துடுப்பெடுத்தாட ஏனைய வீரர்களான மஹேல ஜயவர்தன 14, சந்திமால் 26, சத்துருங்க டி சில்வா 17 என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
 
குமார் சங்கக்கார 76 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துச் சென்றார். மெத்தியூஸ் 45, பெரேரா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
 
ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் முஹமட் நபி உட்பட 8 பந்து வீச்சாளர்கள் இன்று பந்து வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்: