61 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இலங்கை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டியில் சங்கக்காரவின் சதத்துடன் 61 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி டாக்காவில் இடம்பெற்றது.
பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டுள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களின் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோர் தலா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க அடுத்த களமிறங்கிய சங்கக்காரவுடன் சந்திமால் இணைந்தார்.
சங்கக்கார நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்க சந்திமால் 9 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
பின்னர் களத்தில் இருந்த சங்கக்காரவுடன் அசான் பிரியன்ஜன் கைகோர்த்தார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக துடுப்பெடுத்தாடி இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்த பிரியன்ஜன் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மெத்தியூஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் இருந்த சங்கக்கார 102 பந்துகளில் 102 ஓட்டங்களை கடந்து ஒருநாள் அரங்கில் 17 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
சங்கக்கார 128 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க அதிரடியில் மிரட்டிய மெத்தியூஸ் 39 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தால். பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா இன்றைய போட்டியில் எவ்வித ஓட்டங்களுடன் பெறாது ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் ரூபெல் ஹ{சைன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 290 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 61 ஓட்டங்களால் தோல்வியை தழுவியதோடு தொடரையும் பறிகொடுத்தது.
அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் மாத்திரம் 79 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து
ஏமாற்றமளித்தனர்.
ஏமாற்றமளித்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, சேனாநாயக, திசர பெரேரா மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
துடுப்பாட்டத்தில் அசத்திய நட்டசத்திர வீரர் குமார் சங்கக்கார போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
Post a Comment