சதங்களை குவிப்பதே இலக்கு – கெய்ல்
பங்களாதேஷில் நடைபெற்று வரும் உலக இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் சதங்களை குவிப்பதே தமது இலக்கு என மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசுவதுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் கிறிஸ் கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு சாம்பியனான தாம் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்வதென்பது எளிதான விடயமில்லை என்ற போதிலும் அதற்கான சவாலை சந்திக்க தயாராக இருப்பதாக கெய்ல் சுட்டிக்காட்டியுள்ளார்.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக இருபதுக்கு-20 போட்டியின், முதல் போட்டியில் கிறிஸ் கெய்ல் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சதமடித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment