உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

பேஸ் புக், டுவிட்டரில் பயன்பாட்டிலுள்ள 900 வார்த்தைகள் ஒக்ஸ்போர்ட் அகராதியில் சேர்ப்பு

சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரின் வருகைக்கு பின்னர் அவற்றில் மக்கள் புதிதாக உருவாக்கிப் பயன்படுத்தும் 900 வார்த்தைகள் ஒக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒக்ஸ்போர்ட் அகராதி குறிப்பிட்ட கால இடைவெளியில் சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் புதிய புதிய வார்த்தைகளைத் தனது அகராதியில் இணைத்து வருகிறது.
இணையதள யுகத்திற்குப் பிறகு பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.
கடந்த காலத்தில் எஸ்.எம்.எஸ்சில்  வார்த்தைகளை சுருக்கிப் பயன்படுத்திய இளைய தலைமுறைகள் இன்றைக்கு இணைய தலைமுறைகளாக மாற்றம் பெற்று புதிய  வார்த்தைகளைப் புழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ஒக்ஸ்போர்ட் அகராதி தயாரிப்பு குழுவின் தலைவர் கேதரின் கான்னர் கூறுகையில், “சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் பல்வேறு புதிய வார்த்தைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். 
டிக்-டாக் என்ற வார்த்தை முன்பு கடிகாரத்தின் ஒலியைக் குறித்து வந்தது. தற்போது செய்திகளை முழுமையாக வரிசைக்கிரமமாகத் தரும் செய்தியாளரை அது குறிப்பிடும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 இது போன்று பல்வேறு புதிய சொற்கள் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான புதிய 900 வார்த்தைகளை அகராதியில் தற்போது இணைத்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்: