காணாமற்போன விமானத்தை தேடும் பணி விஸ்தரிப்பு
காணாமற்போன மலேசிய விமானத்தை தேடும் பணிகள் தற்போது சர்வதேச கடல் மற்றும் வான் பரப்புகளுக்கு மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா நாட்டின் நிலப்பரப்பின் அளவிற்கு, தற்போது தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய ஆசிய பகுதியிலிருந்து இந்து சமுத்திரத்தின் தென்பகுதி வரையுள்ள சுமார் 7.68 மில்லியன் சதுர அடி வரை தமது தேடுதல் நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய பதில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
229 பேருடன் பயணித்த எம் ஏச் 370 என்ற குறித்த விமானம் கடந்த 8 ஆம் திகதி காணாமல் போயிருந்ததுடன் அதனைத் தேடும் பணிகளில் 25 நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
எனினும் உள்நோக்கத்துடன் குறித்த விமானம் திட்டமிட்ட பயணப் பாதையை தவிர்த்து வேறு திசைக்கு திருப்பப்பட்டதாக மலேசியா தெரிவித்துள்ளது.
இதேவேளை விமானம் காணாமற்போய், 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் விமானத்தில் பயணித்தவர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவுகளை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை விமானம் காணாமற்போய், 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் விமானத்தில் பயணித்தவர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவுகளை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment