குடை மிளகாய் திருடிய தாயை கொலை செய்து அவரது இரு மகள்களையும் வல்லுறவுக்குட்படுத்திய கொடூரம்
குடை மிளகாய் திருடிய தாயைக் கொலை செய்து அவரது இரு மகள்களையும் வல்லுறவுறக்குட்படுத்திய கொடூரமான சம்பவமொன்று நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.
நைஜீரியாவின் லகோஸ் மாநிலத்திலிலுள்ள ஒபா மொருபு சர்வதேச சந்தையிலேயே இச்சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புட்ட 10 சந்தேக நபர்களை கொலை, தரக்குறைவான நடத்தை, மிரட்டிப் பணப்பறித்தல் மற்றும் சதி ஆகியவற்றுக்காக குற்றப்பதிவு செய்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தாயும் அவரது மகள்களும் சந்தையில் குடை மிளகாய் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு சட்டத்துக்கு முரணான நீதிக்குட்பட்ட முறையில் தாயை சித்திரவதை செய்து கொலைசெய்ததுடன் அவரது மகள் இருவரையும் பாலியல் வல்லுறவுக்குடுத்தப்பட்டுள்ளனர். வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு மகள்களையும் அவர்களின் தந்தை கப்பம் செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்தாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியாக தீயாக பரவியுள்ளது. இந்த வீடியோவில் பெண்கள் மூவரும் நிர்வாணமாக்கி துன்புறுத்தப்பட்டமையும் பதிவாகியுள்ளது.
சட்டத்துக்கு முறணாக வீதி நியாங்களால் குற்றத்தனை தடுக்க முடியாது என இத்தாக்குதல் குறித்து மனித உரிமைய ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment