உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த சந்தன எண்ணெய் மீட்பு

sandalwood-oil
விமானத்தில் எடுத்துச் செல்லப்படவிருந்த பிரபல நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சந்தன எண்ணெய் தொகை ஒன்றை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நிறுவனம் ஹொரணை பிரதேசத்தில் இயங்கும் இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதியை பெற்ற நிறுவனம் என தெரியவருகிறது.
சந்தன எண்ணெயை அலுமினிய கொள்கலன் ஒன்றுக்குள் வைத்து அதனை இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு கொண்டு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
தாய்லாந்து விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் எடுத்துச் செல்லப்படவிருந்த இந்த சந்தன எண்ணெயின் பெறுமதி சுமார் 7.2 மில்லியன் என சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

0 கருத்துகள்: