அஸ்தமிக்கப் போகின்றதா பேஸ்புக்?
உலகின் முதற்தர சமூகவலைத்தளமான பேஸ்புக் தனது மின்னஞ்சல் சேவையினை முற்றாக நிறுத்தவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில் விண்டோஸ் மெசஞ்சர் சேவையினையும் எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதியிலிருந்து நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கான அப்பிளிக்கேஷனையும் இணையத்தளத்திலிருந்து நீக்கவுள்ளது. எனினும் இச்சேவையை நிறுவத்துவதற்கான காரணத்தை பேஸ்புக் இதுவரை வெளியிடவில்லை.
அண்மையில் “வாட்ஸ் அப்” இனை முழுமையாக வாங்கிய பேஸ்புக் நிறுவனம் அதனை பிரபல்யப்படுத்தும் பொருட்டே தனது விண்டோஸ் மெசஞ்சர் சேவையினை நிறுத்துவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment