தேர்தல் சட்டங்களை மீறியவர்கள் கைது
தேர்தல் சட்டத்திட்டங்களை மீறிய 33 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியினுள், சட்டவிரோத தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட 9 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத ஊர்வலம், சுவரொட்டி ஒட்டுதல், பெருந்தெருக்களில் வாக்கு எண் வரைதல் போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த கைதுகள் இடம் பெற்றுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment