உலகின் மிகப்பெரிய இயற்கை மார்பகங்களைக் கொண்ட பெண் : கின்னஸ் உலக சாதனை என உறுதிப்படுத்தப்பட்டது
உலகின் மிகப்பெரிய இயற்கை மார்பகங்களைக்கொண்ட பெண்ணாக ஜேர்ஜியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
ஜோர்ஜியானி தலைநகரான அட்லாண்டாவில் வசிக்கும்53 வயதான அனீ ஹோகின்ஸ் என்ற பெண்ணே இச்சாதனைக்குச் சொந்தக்காரி. இதனை 'த கின்னஸ் புக் ஒப் வேர்ல்ட் ரெகோர்ட்ஸ்' உறுதிப்படுத்தியுள்ளது.
இவரது மார்பின் அளவு 102 ZZZ என்பதுடன் 3.5 அடி நீளமானது. மார்புகளின் நிறை தலா 36.2 கிலோ கிராம் என அளவிடப்பட்டுள்ளது.
சிறு வயதிலிருந்தே தனது மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்ததாகவும் அது தனது வாழ்க்கையின் உயர்வடைவதற்கு உதவியாக இருந்துள்ளதாகவும் கூறுகிறார் 2 பிள்ளைகளின் தாயான ஹோகின்ஸ்.
தன்னை தானே வீடியோ எடுத்து இதுவரையில் 250க்கும் அதிகமான வீடியோக்களை வெளியிட்டுள்ளாராம். மொடலாகவும் இருந்து வருகின்றார்.
இது குறித்து ஹோகின்ஸ் கூறுகையில், நான் மில்லியனில் ஒருவள். 'என்னைப் போன்று வேறு எவரும் இல்லை. நான் பாதுகாப்பில் உள்ளேன் ஏனெனில் மக்கள் என்னைத் துரத்துகின்றனர்.
பாடசாலைக் காலத்திலிருந்தே நான் மேசையில் அமர்வதற்கும் காரில் பயணிப்பதற்கும் சிரமப்பட்டுள்ளேன். அது போல மேலும் சிரமங்கள் உண்டு. ஆனாலும் எனது மார்பகங்களை வெட்டி சிறிதாக்க எண்ணியதில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
ஹோகின்ஸ் வீதியில் நடந்து செல்லும்போது அவரை ஆண்கள் ரசிப்பதாகவும் பெண்கள் பலர் மார்பகத்தின் அளவை குறைக்க வேண்டும் என கருத்துக் கூறுவதாகவும் ஹோகின்ஸ் எனத் தெரிவித்தார் .
0 கருத்துகள்:
Post a Comment