தேர்தல் காலத்தில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - இந்திய உள்துறை அமைச்சு
இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க முடியாது என இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல் உபதலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் தன்னை சந்தித்தபோதே அமைச்சர் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
'பொதுத்தேர்தல் நடைபெறுவதன் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளின் பாதுகாப்புக்குத் தேவைப்படும் பாதுகாப்புப் படையணியை வழங்க முடியாது. அவர்கள் தேர்தல் காலத்தில் மாற்று இடமொன்றை தேடிக்கொள்ள வேண்டும்' என இந்திய உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வருட ஐ.பி.எல். போட்டிகளை ஏப்ரல் 9 ஆம் திகதிக்கும் ஜூன் 3 ஆம் திகதிக்கும் இடையில் நடத்துவதென இறுதியாக நடைபெற்ற ஐ.பி.எல். நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இப்போட்டிகளை நடத்த முடியாவிட்டால் தென்னாபிரிக்கா இதை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எதிர்வரும் 28 ஆம் திதகி நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஆளுநர் கவுன்ஸில் கூட்டம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயற்குழுக்கூட்டத்தின்போது மேற்கொள்ளப்படவுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment