உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்


கண்டி, போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை 
பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
சில தினங்களுக்கு முன் கண்டி நகரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய போது மேற்படி சந்தேக நபர் கைதானதாகப் பொலிசார் தெரிவித்தனர். 
 
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த போது சுகவீனமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அதிகாலை மலசலகூடம் செல்வதாக கூறி தப்பிச் சென்றுள்ளார்.
 
பொநறுவை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதோடு குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்: