உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

கிண்ணியா பாலத்தில் விசித்திரமான பாம்புகள்

கிண்ணியா கச்சகொடு தீவு அரை ஏக்கர் பாலத்தில் நூற்றுக்குமேற்பட்ட விசித்திரமான பாம்புகளை நேற்று இரவு அவதானிக்க கூடியதாக இருந்தது.
 
இப் பாம்புகளைப் பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் குழுமி இருந்தனர். இதுபோன்ற பாம்புகள் ஏற்கனவே கிண்ணியா கட்டையாற்றுப் பாலம், ஒறிகன் பாலம், குட்டிக்கராச்சிப் பாலங்களிலும் வெளியாகியுள்ளன. 
 
இரவில் மட்டும் வெளியாகி மக்களை அச்சத்துக்குள்ளாக்கி வருவதுடன் பகலில் அப்பாம்புகள் தென்படுவதில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். 
 
பாம்பை வெளியில் எடுத்துப்போட்டபோது நீராக கரைவதாக தெரிவிக்கின்றனர் இது பாம்பு போன்ற தோற்றமுடைய உயிரினம் என்றும் தற்போது நிலவிவரும் உஸ்னமான காலநிலை காரணமாக மண்ணில் இருந்து வெளிப்படுவதாக பலர் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்: