உலக T 20 கிரிக்கெட்டில் இரத்த உறவுகள்
பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுவரும் ஐந்தாவது உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் அணிகளில் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் சகோதர, சகோதரிகள் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
ஓபிறையன் சகோதரர்கள் (அயர்லாந்து)
அயர்லாந்து ஆடவர் அணியில் நீல் பிறையன் ; மற்றும் கெவின் பிறையன் ; ஆகிய சகோதரர்கள் விளையாடுகின்றனர். இவர்கள் இருவரும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அணியில் பிரதான துடுப்பாட்ட வீரர்களாத் திகழ்கின்றனர்.
இவர்களில் இளையவரான கெவின் பிறையன் 2011 உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக பெங்களள10ரில் 113 ஓட்டங்களைக் குவித்து அயர்லாந்துக்கு 3 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்திருந்தார். அப் போட்டியில் 50 பந்துகளில் சதம் குவித்து உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேக சதத்தைக் குவித்த சாதனைக்கும் உரித்தானார்.
மெக்கலம் சகோதரர்கள் (நியூ ஸிலாந்து)
நியூ ஸிலாந்து அணியில் மெக்கலம் சகோதரர்களான ப்றெண்டனும் நதனும் விளையாடுகின்றனர். அணித் தலைவர் ப்றெண்டனும் நதனும் அதிரடிக்குப் பெயர் பெற்றவர்கள். சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் 1959 ஓட்டங்களை ப்றெண்டன் மெக்கலம் பெற்றுள்ளதுடன் இரண்டு சதங்களைக் குவித்துள்ள ஒரேஒரு வீரராவார். நதன் மெக்கலம் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் ஆவார்.
கூப்பர் சகோதரர்கள் (நெதர்லாந்து)
சகலதுறை வீpரர் டொம் மற்றும் பென் ஆகியோர் நெதர்லாந்து அணியில் இடம்பெறும் சகோதரர்கள் ஆவர். நியூ சௌத் வேல்ஸில் பிறந்தவரான மூத்த சகோதரர் டொம், அவுஸ்திரேலியாவின் 19 வயதுக்குட்பட்ட அணியிலும் விளையாடியுள்ளார்.
அக்மால் சகோதரர்கள் (பாகிஸ்தான்)
பாகிஸ்தானின் துடுப்பாட்ட வரிசையில் அதிரடிக்குப் பெயர் பெற்றவர்கள் கம்ரன் மற்றும் உமர் அக்மால் சகோதரர்களாவர். இவர்கள் விக்கெட் காப்பாளர்களானபோதிலும் துடுப்பாட்டத்திற்காக இருவரும் அணியில் இடம்பெற்றுவருகின்றனர். இவர்களில் இளையவரான உமர், 52 இருபதுக்கு 20 போட்டிகளில் 1093 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். மூத்தவரான கம்ரன் 849 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
மோர்க்கல் சகோதரர்கள் (தென் ஆபிரிக்கா)
மோர்க்கல் சகோதரர்களான ஆல்பி மற்றும் மோர்னி ஆகிய இருவரும் இடதுகை துடுப்பாட்ட வீரர்களும் வலது கை வேகப் பந்துவீச்சாளர்களும் ஆவர். இவர்கள் இருவரில் மூத்தவரான ஆல்பி சிறந்த சகலதுறை வீரராவார். சரவ்தேச இருபதுக்கு 20 போட்டிகளில் இவர் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 20க்கும் மேற்பட்ட விக்கட்களைக் கைப்பற்றியுள்ளார். அதிரடிக்கும் பெயர் பெற்றவர். மோர்னி பந்துவீச்சாளராகவே அணியில் பயன்படுத்தப்படுகின்றார். இவர் இருபதுக்கு 20 போட்டிகளில் 43 விக்கட்களைக் கைப்பற்றியுள்ளார்.
மஸகட்ஸா சகோதரர்கள் (ஸிம்பாப்வே)
மஸகட்ஸா சகோதரர்களில் மூத்தவரான ஹமில்டன் சகலதுறை வீரராவார். டெஸ்ட் போட்டிகளிலும் சர்வதேச ஒருநாள் சதம் குவித்துள்ள இவர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் 700 க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இளையவரான ஷிங்கிராய், பிரதான பந்துவீச்சாளராக 7 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார்.
ஜொய்ஸ் சகோதர, சகோதரிகள் (அயர்லாந்து)
அயர்லாந்து ஆடவர் அணியில் எடமண்ட் ஜொய்ஸும் மகளிர் அணியில் அவரது இரட்டைச் சகோதரிகளான இஸபெல் மற்றும் சிசிலியா ஆகியோரும் விளையாடுவது சிறப்பம்சமாகும். எட் என சுருக்கமாக அழைக்கப்படும் எட்மண்ட், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காககவும் விளையாடியுள்ளார். ஜொய்ஸ் இரட்டைச் சகோதரிகள் சகலதுறை வீராங்கனைகளாவர்.
நைட் இரட்டைச் சகோதரிகள் (மே.தீ.)
இவ் வருட உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மற்றொரு இரட்டைச் சகோதரிகள் கைசியா, கிஷோனா ஆகியோராவர். இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற உலக இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடி இருந்தனர். கைசியா ஒரு திறமைவாய்ந்த விக்கெட்காப்பாளர் ஆவார். கிஷோனா சிறந்த துடுப்பாட்டக்காரர் ஆவார்.
0 கருத்துகள்:
Post a Comment