உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

பாகிஸ்தான் அணிக் கப்டனாக அப்ரிடியை நியமிக்க வேண்டும்



2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பலவீனமான பாகிஸ்தான் அணியை அரையிறுதி வரை முன்னேற்றி வந்த ஷாகித் அப்ரீடியை 2015 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் போதும் பாகிஸ்தான் கப்டனாக நியமிக்க வேண்டும் என்று வசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார். 

நடப்பு கப்டன் மிஸ்பா உல்ஹக் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கினாலும் முக்கிய முடிவுகளில் தொடர்ந்து சோடை போகிறார் என்று சாடியுள்ளார் வசிம் அக்ரம். 

நடந்து முடிந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் துடுப்பாட்டத்தை முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என்று கூறிய வசிம் அக்ரம், இது போன்று முக்கிய முடிவுகள் மற்றும் அணித் தேர்வுகளில் மிஸ்பா குழப்படி செய்கிறார் என்றும் சாடினார். 

இதனால் 2015 உலக்க கிண்ணத்தின் போது ஷாகித் அப்ரிடியை கப்டனாக்க வேண்டும் என்று அவர் கூறினார். பங்களாதேஷில் நடைபெறும் கூ20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தை வெல்ல இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார்.  

0 கருத்துகள்: