உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

மங்களவுடன் சம்பாஷித்த ஜனாதிபதி

பாராளுமன்றத்தின் இன்று புதன்கிழமை அமர்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட உறுப்பினர் மங்கள சமரவீரவுடன் சம்பாஷனையிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.


பாராளுமன்றும் இன்று புதன்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூடியது 
 
அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்தார்.
 
பிற்பகல் 1.25க்கு சபைக்குள் வருகை தந்த ஜனாதிபதி சுமார் 16 நிமிடங்கள் அமர்ந்திருந்து அமர்வு நடவடிக்கைகளை அவதானித்தார். 
 
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்க, ஜோசப் மைக்கேல் பெரேரா ஆகியோருடன் பேசிய அதேவேளை மங்கள சமரவீர எம்.பி.யுடனும் ஏதோ பேசியதுடன் இருவரும் சிரித்துக்கொண்டனர்.
 
மேலும் பிரதமர், ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் பாராளுமன்ற    செயலாளர் நாயகம் ஆகியோருடனும் கலந்து பேசியதை அவதானிக்க முடிந்தது.

0 கருத்துகள்: