ஒளி வீசும் மரைக் கொம்புகள்
பின்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் ஒளி வீசும் கொம்புகளை உடைய மரைகள் வலம் வர ஆரம்பித்துள்ளன.
ஆனால் இவை இயற்கையாகவே ஒளிரும் கொம்புகளை உடைய மரைகள் அல்ல. பின்லாந்தில் வருடத்துக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் விபத்துகளுடன் மரைகள் சம்மந்தப்படுவதாக பின்லாந்து மரை பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த விபத்துகளை குறைப்பதற்கு மரையின் கொம்புகளில் ஒளிரக்கூடிய தெளிப்பான் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக பரீட்சார்த்த நடவடிக்கைகள் கடந்த வாரம் பின்லாந்தின் தலைநரான லப்லேண்டின் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் பின்லாந்தின் அனைத்து மரைகளுக்கும் ஒளி வீசும் தெளிப்பான் பிரயோகிகப்படும் என பின்லாந்து மரை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அனே ஒலிலா தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment