உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

எகிப்திய இடைக்கால அரசாங்கம் இராஜினாமா -பிரதமர் திடீர் அறிவிப்பு

எகிப்­திய இடைக்­கால பிர­தமர் ஹாஸெம் பெப்­லாவி தனது அர­சாங்கம் பதவி வில­கு­வ­தாக திடீர் அறி­விப்புச் செய்­துள்ளார். நாட்டின் தற்­போ­தைய நிலை­மையை கவ­னத்திற் கொண்டே இந்த தீர்­மா­னத்தை எடுத்­த­தாக அவர் கூறினார்.
 
அந்­நாட்டில் பொது பணி­யா­ளர்கள் குப்பை சேக­ரிப்­ப­வர்கள் உள்­ள­டங்­கலாக பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­பட்ட பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு போராட்­டங்கள் மற்றும் சமையல் எரி­வாயு பற்­றாக்­குறை தொடர்­பான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­ற­தை­ய­டுத்தே பிர­த­மரின் மேற்­படி அறி­விப்பு இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
 
எகிப்தில் இடம்­பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனா­தி­பதி மொஹமட் முர்ஸி ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து பெப்லாவி அவ­ரது இடத்­திற்கு நிய­மிக்­கப்­பட்டார்.
 
முர்­ஸியின் வெளி­யேற்­றத்தை தொடர்ந்து அவ­ரது முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பை நசுக்க பொலிஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போது 1000 க்கும் அதி­க­மானோர் பலி­யா­ன­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டனர்.
 
அதே­ச­மயம் சினாய் தீப­கற்­பத்­தி­லுள்ள போரா­ளி­களும் அர­சாங்கம், பொலிஸ் மற்றும் இரா­ணுவ உத்­தி­யோ­கத்தர்களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்த ஆரம்­பித்­ததில் நூற்­றுக்­க­ணக்­கானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.
 
அர­சாங்­கத்தின் இரா­ஜி­னாமா குறித்து தொலைக்­காட்­சியில் உரை­யாற்­றிய பெப்­லாவி, இரா­ஜி­னாமா செய்­வ­தற்­கான காரணம் குறித்து கருத்து எத­னையும் வெளி­யி­ட­வில்லை.

அமைச்­ச­ர­வை­யா­னது கடந்த 6 அல்­லது 7 மாதங்­க­ளாக கடும் சிர­மத்தை எதிர்­கொள்ள நேர்ந்­த­தா­கவும் பல சந்­தர்ப்­பங்­களில் சிறப்­பான பெறு­பே­றுகள் கிடைத்­த­தா­கவும் கூறிய பெப்­லாவிஇ "நாடு பெரும் அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ளது. இந்­நி­லையில் நாட்டை பாது­காக்க நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டி­யுள்­ளது" என்று கூறினார்.
 
இந்­நி­லையில் புதிய பிர­தமர் ஒருவர் பெயர் குறிப்­பி­டப்­படும் வரை பெப்­லா­வியை அதி­கா­ரத்தில் தொடர்ந்து இருக்க கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் அல் அஹ்ரம் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
 
புதிய பிர­த­ம­ராக வீட­மைப்பு அமைச்சர் இப்­ராஹிம் மிஹ்லிப் நிய­மிக்­கப்­ப­டலாம் என
அந்தப் பத்­தி­ரிகை அர­சாங்க வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
அமைச்சரவையானது தனது இராஜினாமா கடிதங்களை இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூரிடம் ஒப்படைத்துள்ளது.
 
கடந்த ஜனவரி மாதம் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மத்தியில் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

virakesari
 

0 கருத்துகள்: