உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள்.

1779896_480914912017696_1350382126_n
ஒருவர் மீது கொண்ட வெறுப்பிலும் ஒரு கூட்டமைப்பின் மீது கொண்ட குரோதத்திலும் இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகளை வளைத்தும் மறைத்தும் பேசுவது விரோதிக்கும் செயலாகும். ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திக்க முடிகின்ற அனைத்து அவகாசங்களும் சந்தர்ப்பங்களும் சூழல்களும் இஸ்லாத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கின்றன.
அதே சமயம் சமுதாயத்தில் ஆண்களைப்போலவே பெண்களும் கலந்து கொள்ளும் கூட்டுப் பொறுப்புகள், சன்மார்க்கக் கடமைகள் போன்றவற்றை நிறைவேற்ற இருக்கின்ற அனுமதியை மறுப்பது சந்தர்ப்ப வாதமாகும். ஓட்டுச் சாவடிகளில் ஒரு வரிசையில் ஆண்களும் ஒரு வரிசையில் பெண்களும் மணிக் கணக்கில் காத்து நின்று வாக்களிப்பது போன்ற அனுமதியளிக்கப்பட்ட சலுகைகள் என்று பெண்களுக்கும் இருக்கவே செய்கின்றன.
ஆண்களும் பெண்களும் கூடுகின்ற இடங்களில் பெண்களுக்கென்று தனி கவனம் செலுத்தப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு அவர்கள் இல்லங்களுக்கு திரும்பி வரும் வரை உத்திரவாதம் இருந்தால் அவர்கள் எந்த ஒரு பொது நிகழ்விலும் கலந்து கொள்வதற்கு அனுமதி இருக்கிறது. இத்தகைய சந்தர்பங்களில் பெண்கள் கூட்டாகப் பங்கெடுத்துக் கொள்வார்கள். தனிமை காரணமாகவோ நிர்பந்தம் காரணமாகவோ ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அசௌரியங்கள் அல்லது பாதிப்புகள் எதுவும் இத்தைகைய சந்தர்பங்களில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது.
ஐங்காலத் தொழுகைகள், ஜும்ஆத் தொழுகைகள் மைதானங்களில் நடைபெறும் பெருநாள் தொழுகை, மழை வேண்டி நடத்தப்படும் தொழுகைகள், ஹஜ் கடமைகள், ஜிஹாத் என்னும் புனிதப்போர், இஸ்லாத்தைப் போதிக்கும் மஜ்லிஸ்கள், மற்றும் அனுமதிக்கப்பட்டவைகள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இத்தகைய கடமைகளை நிறைவேற்றும் சந்தர்பங்கள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வழங்கப்பட்டன.
அப்போது திரைகள் போடப்படவில்லை. ஹஜ்ஜிலும் மூன்று ஹரம்களிலும் இந்த நடைமுறை இன்னும் பேணப்பட்டு வருகிறது. அத்தோடு இஸ்லாமிய உலகிலும் குறிப்பாக இலங்கையிலும் இன்று இந்த நடைமுறைகள் தெளிவான விளக்கங்களோடு அமல் செய்யப்பட்டு வருகின்றன. சன்மார்கத்தின் கூட்டுப்பொறுப்புகளை நிறைவேற்றும் விஷயத்தில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம வாய்ப்பளிக்கப்பட்ட காரணத்தினால்தான் அதல பாதாளத்திலிருந்து இஸ்லாமிய சமூகத்தை உத்தமத்தின் உச்சிக்கு அன்றைய சூழலில் கொண்டு செல்ல முடிந்தது.
1545760_204427246424930_24792290_n
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பர்தா சட்டம் இறக்கப்பட்ட பின்னரும் கூட சமுதாயக் கூட்டு கடமைகள் விஷயத்தில் பெண்கள் இவ்வாறுதான் நடத்தப்பட்டார்கள். இன்று கூட்டுப் பொறுப்புகளில் பெண்களுக்குரிய பங்கை சமூகம் வழங்க மறுத்ததின் காரணத்தால் ஆண்கள் மேற்கொள்ளும் ஒரு சாண் முயற்சியை பெண்கள் ஒரு முழத்தால் சறுக்கச் செய்து விடுகிறார்கள்.
இதற்குக் காரணம் பெண்களல்ல! பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்ததைக் கொடுக்க மறுக்கும் மறுத்துக் கொண்டிருக்கும் ஆண்களே! எது அனுமதி எது அனுமதியில்லை என்பதை புரிந்து கொண்டால் எதுவுமே முரண்பாடில்லை.

0 கருத்துகள்: