உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

இந்திய இந்தமுறையும் ஜெனீவா பிரேரணையை ஆதரிக்கும்?


ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு இந்திய ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.


இலங்கையில் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியதைத் தவிர, மனித உரிமைகள் மற்றும் மறுசீரமைப்பு விடயத்தில் ஏனைய திருப்திகரமான செயற்பாடுகள் எவையும் இடம்பெறவில்லை என்று இந்தியா கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் அடிப்படையாக கொண்டே, இலங்கை தொடர்பான நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மார் குர்சித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர் குழு ஒன்று கடந்த புதன்கிழமை அவரை சந்தித்த போது, இந்த கருத்து வெளியிடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியா தேர்தல் மனநிலையில் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கை தொடர்பில் முன்வைக்கவுள்ள பிரேரணை குறித்த நிலைப்பாடும், இந்த தேர்தலை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அமெரிக்காவின் பிரேரணையின் இறுதி வடிவத்தை காணாமல் இந்தியா தமது நிலைப்பாட்டை அறிவிக்காது என்று, இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: