பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்து இந்திய சிறுவன் பலி- சவுதியில் பரிதாபம்
சவுதியில் பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த இந்திய சிறுவன் பலியானாள். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சையூர் ரஹ்மான்.
இவர் சவுதியில் உள்ள மெக்கா நகரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சையான் (3).
அதே பகுதியில் உள்ள பள்ளியில் கிண்டர் கார்டன் வகுப்பில் படித்து வந்தான். நேற்று வகுப்பு முடிந்து பள்ளி பேருந்தில் வீட்டிற்கு திரும்பினான். அப்போது வீட்டின் அருகே பேருந்தில் இருந்து இறங்க முயன்ற போது அதற்குள் பஸ் கிளம்பியது.
இதில் நிலை தடுமாறி சையான் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியா னான். இந்த சம்பவம் குறித்து மெக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment