உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

இறுதிச் சடங்குக்காக கார்களைக் கழுவி நிதி சேகரித்த அமெரிக்க குடும்பம்

அமெரிக்காவைச் சேர்ந்த  ஒருவரின் மரணச் சடங்குகளை நடத்துவதற்கு பணம் இல்லாததால் குடும்ப அங்கத்தவர்கள் கார்களை கழுவி பணம் சேகரித்த சம்பவம் டெக்சாஸ் மாநிலத்தில்  அண்மையில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக பாடசாலை, கல்லூரி நிகழ்வுகளுக்காக மாணவ மாணவிகள் இவ்வாறு கார்களை கழுவி நிதி திரட்டுவதுண்டு.


 ஆனால், 'நாம் வேடிக்கைக்காக இவ்வாறு கார் கழுவவில்லை. எமது உறவினரை அடக்கம் செய்வதற்கு எம்மிடம் பணம் இல்லை என' இறந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

ஹொஸ்டன் நகரைச் சேர்ந்த றே ஃபார்மர் என என்பவரின் இறுதிச்சடங்குக்காவே இவ்வாறு நதி சேகரிக்கப்பட்டது.  மேற்படி இறுதிச்சடங்குக்காக 9000 டொலர்கள் தேவைப்படுவதாகவும் முதல் நாளில் 2000 டொலர் சேகரித்திருந்ததாகவும் அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


கடந்த மாதம் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்வர் ரிக்கோ (22) என்பவர் இறந்த பின்னரும் அவரின் இறுதிச்சடங்குக்காக குடும்பத்தினர் நிதி சேகரிப்பில் ஈடபட்டுனர். அமெரிக்காவில் இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கு சராசரியாக 7045 டொலர் (சுமார் 923,000 ரூபா) செலவாகுவதாக அமெரிக்காவின் தேசிய மரணக்கிரியை நடத்துநர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

0 கருத்துகள்: