உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

715 உலகங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன - நாஸா


கெப்லர் விண்வெளி தொலைநோக்கியினூடாக சூரியத் தொகுதிக்கு வெளியில் புதிதாக 715 உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாஸா நேற்று அறிவித்துள்ளது.


மனித வாழ்க்கைக்கு உகந்த பூமியை ஒத்த கிரகத்தினை கண்டுபிடிப்பதனை இலக்காகக்கொண்டு செயற்படும் கெப்லர் திட்டத்தின் மூலமே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 715 கிரகங்களும் 305 வேறுவேறான நட்சத்திரங்களை சுற்றி வருகின்றது. இக்கிரகங்களில் 95 சதவீதமானவை புவிக்கும் நெப்டியூனுக்கும் இடைப்பட்ட அளவினை உடையதாக உள்ளது. 

'கிரக வேட்டை முடிவுகளால் கெப்லர் குழுவினர் தொடர்ந்தும் எங்களை மகிழச்சியும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகின்றனர்' என நாஸாவின் அறிவியல் திட்ட இணை நிர்வாகப் பணிப்பாளர் ஜோன் க்ரன்ஸ்பெல்ட் தெரிவித்துள்ளார்.

கெப்ளர் விண்வெளி ஆய்வின் மூலம் இதுவரையில் சுமார் 1700 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: