மரம் வீழ்ந்ததில் தொழில்நுட்ப அதிகாரி ஸ்தலத்தில் மரணம்
கல்முனையிலிருந்து மகியங்கணையை நோக்கி மோட்டார் சைக்களில் சென்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர் மீது மரம் வீழ்ந்ததில் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஸ்தலத்தில் மரணமான சம்பவம் ஒன்று நேற்று மாலை மஹியங்கன சேரன்கட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பலியான தொழில் நுட்ப உத்தியோகத்தர் நாகராஜா சதீஸ் குமார் (35) என்பவர் காரைதீவை பிறப்பிடமாகவும், நட்பிட்டிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட மகியங்கன வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமை புரிபவர் ஆவார்.
கல்முனையிலிருந்து மஹியங்கணை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது பதியத்தலாவ சேரன்கட எனும் இடத்தில் வீதி அருகில் இருந்த பாரிய மரம் சரிந்து வீழ்ந்ததில் மோட்டார் சைக்களில் சென்றவர்கள் மரத்துக்குள் அகப்பட்டு தொழில்நுட்ப உத்தியோகத்தர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
இவருடன் பயணித்த மற்ற நபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் . இந்த சம்பவம் தொடர்பாக பதியத்தலாவ பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment