உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

13 கோடி ரூபா பெறுமதியான 2 ஆயிரம் வருடங்கள் பழைமையான நூதனசாலை சாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்த கலைஞர்

அமெரிக்காவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நூதனசாலைக்குச் சொந்தமான சாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.


அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள மியாமி பெரெஷ் கலை நூதனசாலை எனப்படும் நூதனசாலையிலேயே இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

51 வயதான மெக்ஸிமோ கெமினரோ என்ற மியாமி கலைஞர் ஒருவரே இவ்வாறு சாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இவர் ஒரு ஓவியர்.

குறித்த நூதனசாலையில் உள்நாட்டு கலைகளை விட அதிகளவில் வெளிநாட்டு கலைகளுக்கே முன்னிரிமை வழங்குவதாகக் கூறி அதனை எதிர்த்தே இவ்வாறனதொரு ஆர்ப்பாட்டத்தில் மெக்ஸிமோ ஈடுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய் வெய்வெய் என்ற சீன கலைஞரின் கைவண்ணத்தில் உருவான வண்ணமயமான கலைப் படைப்புகளான சாடிகளையே உடைத்துள்ளார். இதனையடுத்து மெக்ஸிமோ மீது பொலிஸாரினால் குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பெறுமதியானவற்றை சேதப்படுதினால் 5 வருடங்கள் வரையில் சிறைத் தண்டனை விதிக்க முடியும். இதனால் மெக்ஸிமோவுக்கு குறைந்தது 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

'ஒரு கலை நூதனசாலையாக நவீன மற்றும் பழைமையான உள்நாட்டு, வெளிநாட்டு கலைகளை கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டுக்கு நாங்கள் உயர்வாக மதிப்பளிக்கின்றோம். ஆனால் இது தரக்குறைவான நடவடிக்கை என்பதுடன் அடுத்த கலைஞரருக்கும் அவரது கலைக்குமான அவமரியாதை' என நுதனாசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: