இலங்கை மென்பொருளாளர் இருவர் சர்வதேச ஸ்மார்ட் தொலைபேசி மென்பொருள் உற்பத்தியில்
இலங்கையைச் சேர்ந்த இரண்டு மென்பொருள் பொறியியலாளர்கள் மொபைல் மென்பொருள் உற்பத்தி தொடர்பாக சர்வதேச தரத்திற்கு தங்களது பெயர்களை பதியவைத்துள்ளனர்.
இந்த இருவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற வின்டோஸ் போன் 8 துறையில் தமது சாதனைகளை படைத்துள்ளதுடன் இந்த மாதம் ஸ்பெய்னின் பார்சிலோனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸில் பங்குபற்றுவதற்கும் தகுதிபெற்றுள்ளனர்.
இந்த இரண்டு இளம் மென்பொருள் உற்பத்தியாளர்களான எம்.எஸ். ஹேஷான், 23 வயது காலி றிச்மென்ட் கல்லூரியில் கல்வி கற்றதுடன் APIIT இல் மென்பொருள் பொறியியலாளராக பட்டம்பெற்றுள்ளார். அத்துடன், தாரக்க விஜேபண்டார, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான மேற்படிப்பு கற்றுவருகின்றார்.
இவர்கள் இருவரும்‘Nokia Create’ என்ற சர்வதேச போட்டியில் பங்குபற்றி Nokia Lumia மற்றும் Windows8 ஆகியவற்றுக்கான மென்பொருட்களை தயாரித்து இலங்கைக்கு பெருமை சேர்ந்துள்ளனார்.
8 பிரிவுகளில் 15 செயற்திட்டங்களாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்குபற்றிய மென்பொருள் பொறியியலாளர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் அதாவது படங்கள், விளையாட்டு அல்லது பல்வேறு வித்தியாசமான விரிவாக்கல்களுக்கு அவர்களது விருப்பத்திற்கேற்ப வாய்ப்பளிக்கப்பட்டதனால் இவர்களுக்கு புதிய விடயங்களை சவாலாக எடுத்து செயற்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு செயற்திட்டமும் தனிப்பட்ட கவனத்திற்குட்படுத்தப்பட்டது. இவ்வாறு எடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஊடாக Windows Phone க்கு புதிய மென்பொருளை உள்ளடக்க முடியும் அத்தோடு அதனை மேம்படுத்தவும் முடியும்.
அத்தோடு புதிய மென்பொருட்களை (Apps) உருவாக்கவும் முடியும். இதில் 'Do Good Mission' பிரிவின் ஊடாக கண் பார்வையற்றோருக்கான புதிய மென்பொருளும் உருவாக்கப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றிபெற்ற தாரக்க விஜேபண்டார கூறுகையில்,
மாஸ்டர் மிஷன் என்ற பிரிவின் கீழ் படங்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பாக உலகம் முழுவதிலும் உள்ள 76 நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் போட்டியிட்டேன்.
'படங்கள் தொடர்பான பிரிவில் நான் பல்வேறு போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வித்தியாசமான முறையில் புகைப்படக் கருவி மற்றும் புகைப்படங்களை முகப்புத்தகத்திற்கு (Facebook) பதிவு செய்தல் தொடர்பாக மென்பொருள் ஒன்றை தயாரித்தேன். என்னுடைய மென்பொருளானது முகப்புத்தகத்தின் காலவரிசை மற்றும், தனிப்பட்ட படத்தை உருவாக்குவதற்கான ஆற்றலைக்கொண்டுள்ளது.
இதில் சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் புதிய மாணவர்களுடன் மட்டுமன்றி அனுபவம் வாய்ந்த மென்பெருள் பொறியியலாளர்களுடனும் போட்டியிட்டே இந்த வெற்றியை எனதாக்கிக்கொண்டேன்."
Windows Phone களுக்கு மாத்திரமா உங்கள் மென்பொருள் (App) மட்டுப்படுத்தப்பட்டுள்ளது? என்று கேட்டபோது, தாரக்க கூறுகையில்,
உண்மையில் வின்டோஸ் தொலைபேசி புதிய விடயம் அதனால் அந்த தளம் எனக்கு உற்சாகத்தைத் தந்தது. நான் நினைக்கிறேன் அது எனக்கு ஒரு புதிய அனுபவம். அதனாலேயே அதனைத் தெரிவு செய்தேன். வின்டோஸ் தொலைபேசிகளுக்கு நல்ல வரவேற்பும் கேள்வியும் உள்ளது. வின்டோஸ் மென்பொருளினால் இலவசமாக Tools, Free Dowloads ஆகியன கிடைக்கிறது.
உதாரணமாக மென்பொருள் ஒன்றை செய்து அதனை Microsoft க்கு அப்லோட் செய்தால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அத்துடன் Windows I tpl Apple Tools விலை அதிகம் ஆகவே எப்போதும் மைக்ரோசொவ்ட் பயன்பாட்டாளர்கள் சமூக வளர்ச்சியில் முன்னோடியாக திகழுகின்றனர் என தாரக்க தெரிவித்தார்.
எம்.எஸ், ஹேஷான் தற்போது AHL Business Solutions இல் கடமையாற்றி வருகின்றார். இவர் மாஸ்டர் மிஷனிலுள்ள நொக்கியா கிரியேட்டர்ஸ் செயற்திட்டத்தின் ''Extreme Music' பிரிவில் போட்டியிட்டுள்ளார். அவர் உருவாக்கிய மென்பொருள் 'Do good' என்ற பிரிவை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தாலும் அவர் 'Extreme Music" பிரிவிலேயே மென்பொருட்களை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளார்.
வின்டோஸ் போனில் அடிப்படையான மியூசிக் பிளேயர் உள்ளது. நான் அதிலுள்ள எல்லையைக் கடந்து புதிய இசைகளை பட்டியலில் சேர்ப்பது மற்றும் அதனை அதிலிருந்து நீக்குவது போன்ற விடயங்களையும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதனை பயன்படுத்துவது போன்ற விடயங்களை உள்ளடக்கியதுடன் கண் பார்பையற்றவர்களுக்காக குரல் கட்டளை மூலம் செயற்படுத்துவதற்கு ஒரு குருட்டுத்திரை ஒன்றை அமைத்ததனால் குரல் கட்டளைகள் மூலம் கண்பார்வையற்றவர்களும் பயன்படுத்த அந்த மென்பொருள் உதவியாக இருக்கும்.
இதனை மேலும் விரிவாக்க எண்ணியுள்ளார். காரணம் இதற்கான கேள்விகள் அதிகரித்துள்ளன.
APIIT இல் கற்றுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் Microsoft, மென்பொருள் கருவிகளை (Tools) இலவசமாக வழங்கியது அதனாலேயே விண்டோஸ் இயங்குதளத்தில் மென்பொருட்களை உருவாக்க விரும்பினேன். மேலும் காலம் போததன் காரணமாக ஒவ்வொரு பிரிவின் பயன்பாடுகளையும் மேன்மைபடுத்த முடியாததனால் மைக்ரோசொவ்ட்டின் இயங்குதளத்திற்கு மென்பொருட்களை தயாரிக்க இலகுவாக இருந்தது.
சுயாதீன தொழில்நுட்பம் மற்றும் சந்தை ஆராய்ச்சி அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த Apple மற்றும் Sumsung ஆகியனவற்றின் இடத்தை தற்போது Microsoft தன்வசப்படுத்தி வருகிறது.
இதனால் மிலேனியம் சந்ததியினர் Apple மற்றும் ளுயஅளரபெ போன்களை வாங்குவதற்குப் பதிலாக Samsung தயாரிப்பாளான ஸ்மார்ட் போன்களையே கொள்வனவு செய்கின்றனர். கடந்த வருடம் Microsoft ஸ்மார்ட் போன்களின் விற்பனை விகிதம் 156 என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசொவ்ட் இலங்கைக் கிளையின் பணிப்பாளர் வெலிங்டன் பெரேரா கூறுகையில்,
IDC அறிக்கையின்படி, ஒருபில்லியன் ஸ்மார்ட் போன்கள் முதன்முறையாக கடந்த வருடம் அனுப்பப்பட்டன. ஒரு தடவையில் அதிகமாக ஸ்மார்ட் போன்கள் அனுப்பப்பட்டது இதுவே முதல் தடவையாகும். ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி ஒரு மென்பொருள் டெவலப்பராக இருந்தாலும் சரி இந்தத் துறையில் மேற்கொள்ள வேண்டியது மிகச்சிறிய விடயமே ஆகும்.
அதனாலேயே உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள அனைத்து மென்பொருள் பொறியியலாளர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் நாம் ஊக்குவிக்கிறோம். எமது ஊக்குவிப்புக்களின் பலனே மென்பொருள் டெவலப்பர்ஸ்களின் செயற்திட்டங்கள் வெற்றி கண்டுள்ளமைக்கு முக்கிய காரணமாகும்.
கடந்த வருடம் எமது இமேஜின் கப் பிரிவு உலக விருது ஒன்றினை வென்றதுடன் இந்த வருடம் எமது குழுவிலுள்ள இரண்டு (2) மென்பொருள் மொபைல் வேர்ட்ல் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இது எமக்கும் எமது பங்குதாரரான Nokiaவுக்கும் ஒரு மைல் கல் என்றே கூறவேண்டும்.
தற்போது உலகளாவிய ரீதியில் சைபர்ஸ்பேஸ் சந்தையில் கேள்வி மற்றும் விநியோகம் அதிகரித்துக் காணப்படுவதனால் மென்பொருள் டெவலப்பர்ஸ் மில்லியனர்களாக உருவெடுக்க முடியும். அதனால் இந்த இரண்டு இலங்கை இளைஞர்களுக்கும் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அத்தோடு இவர்கள் இருவரும் Windows Phone மற்றும் Mobile world congress இல் பங்குபற்றி வெற்றிபெறுவதற்கும் Nokia பெரும் ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment