உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

ஜனாதிபதி மாடறுப்பை நிறுத்தாவிட்டால் இன்னும் 499பேர் உயிர்த்தியாகம் செய்வர் - சிஹல ராவய

நாட்டில் இடம்பெறும் மாடறுப்பு உட்பட மிருகவதையை ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி தடுத்து நிறுத்தா விட்டால் இன்னும் 499 பேர் உயிர்த்தியாகம் செய்ய உள்ளதாக சிஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிருக வதைக்கு எதிராக சிஹல ராவய அமைப்பு இன்று கண்டியில் பாரிய ஆர்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளது.
கண்டி ஸ்ரீ தலாத மாளிகையிலிருந்து கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வரையில் இந்தப் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது.
இன்று முதல் 16அம் திகதி வரையில் சிஹல ராவய அமைப்பு மிருக வதைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றது.

இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் சிஹல ராவய அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ள நிலையிலும் போராட்டத்தை போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
மிருகவதையை எதிர்த்து கடந்த வருடம் தலதா மானிகையின் முன் உயிர்த்தியாகம் செய்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்தபடி தாம் ஒரு சங்கம் அமைத்துள்ளோம். அச்சங்கத்தில் 500 பேர் 
உள்ளனர். அதில் ஒருவரே மேற்படி இந்திரரத்ன தேரர் மிருகவதைக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்தார். எனவே இன்னும் ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி நாட்டில் இடம்பெறும் மிருகவதையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீதமிருக்க 499 பேர் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிவரும் என தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் பிறமத தடை சட்ட மூலம் உடன் கொண்டு வரப்பட வேண்டும். இலங்கையிலுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். மாடறுப்பு உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இவ்வார்ப்பாட்ட பேரணியில் பல பௌத்த பிக்குகள் உட்பட நூற்குக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

0 கருத்துகள்: