மணிக்கு 435.31 கி.மீ வேகத்தில் செலுத்தப்பட்ட உலகின் அதிவேகமான கார்
மணிக்கு 435.31 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்தி உலகின அதி வேகமான நான்கு சக்கர கார் என்ற சாதனை ஹெனிஸ்ஸீ நிறுவனம் படைத்துள்ளது.
வெனொம் ஜி.ரி. என்ற கார் மாதிரியே உலகின் அதி வேகமான 4 சக்கர வாகனம் என அமெரிக்க நிறுவனமான ஹெனிஸ்ஸீ சில முறை தெரிவித்திருந்தது.
இருப்பினும் இதனை ஓட்டிப்பார்ப்பதற்கு ஏற்ற ஓடுபாதையை அந்நிறுவனம் கொண்டிருக்கவில்லை.
மணிக்கு 432 கிலோ மீற்றர் வேகத்தில் புகாடி வெய்ரொன் எனும் சுப்பர் காரானது 2010ஆம் ஆண்டில் வொக்ஸ்வேகன் நிறுவனத்தின் தனிப்பட்ட ஓடுபாதையில் ஓட்டிப் பார்க்கப்பட்டதே இதுவரையில் சாதனையாக இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ப்ளோரிடாவிலுள்ள நாஸாவின் விண்வெளி ஓடம் தரையிரங்கும் ஓடுபாதையில் வெனொம் ஜி.ரி. காரினை மணிக்கு 435.31 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்தி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
டொப் கியர் இணையத்தளத்தில் இச்சாதனை குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'இக்கார் இன்னும் வேகமாகக் செல்லும் திறன் படைத்தது' என இக்காரினை ஓட்டிய விமானி ப்ரைன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஓடுபாதை இன்னும் சற்றே பெரிதாக இருந்திருந்தால் மணிக்கு மேலும் 8-16 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்தியிருக்கலாம் எனவும் கூறுகிறார் ஸ்மித்.
2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுமார் 17 கோடியே 48 இலட்சம் பெறுமதியான இக்காரினை இதுவரையில் 11 கொள்வனது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment