கர்ப்ப காலத்தில் பெண்கள் புகைப்பதால் பிறக்கின்ற குழந்தை ஓரினச் சேர்க்கையாளராகலாம் - நரம்பு உயிரியலாளர் தகவல்
பெண்கள் கர்ப்பகாலத்தில் புகைப்பிடிப்பதால் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தை ஓரினச் சேர்ச்கையாளராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாக பிரபல நரம்பு உயிரியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே மேற்குறித்த விடயம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் கர்ப்பத்திலுள்ள குழந்தையின் பாலியல் உறவு தொடர்பில் தாயின் வாழ்க்கை முறை தாக்கம் செலுத்துவதாக பேராசிரியர் டிக் ஸ்வாப் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 69 வயதான டிக் ஸ்வாப் ஆம்ஸ்டெர்டம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாவார்.
ஆனால் இதற்கு ஆதாரபூர்வமான ஆதரங்கள் இல்லை எனவும் அவர் தனது புத்தகத்தில் தெரிவிக்கின்றார்.
மூளையுடன் தொடர்புட்ட வைத்தியரான கலாநிதி ஸ்வாப் வெளியிட்டுள்ள கர்ப்ப காலத்தில் மூளை வளர்ச்சி தொடர்பான சர்ச்சைக்குரிய புத்தகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கர்ப்ப காலத்தில் மது, போதைப் பொருள் பாவனை போன்ற மோசமான நடைமுறைகளால் குழந்தையின் நுண்ணறிவு குறைகின்றது.
அத்துடன் புகைத்தல் பெண் குழந்தைகள் ஓரினச் சேர்க்கையாளராக (லெஸ்பியன்) மாறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது. கர்ப்பமான பெண்களின் மன அழுத்தமும் பாலியல் தொடர்பில் தாக்கம் செலுத்துகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment