8 வயது சிறுவனுடன் 50 தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட 21 வயது யுவதிக்கு இரு வருட சிறைத்தண்டனை
பிரிட்டனைச் சேர்ந்த 21 வயதான யுவதியொருவர் 8 வயது சிறுவனை 50 தடவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லொரென் மொரிஸ் எனும் இந்த யுவதி 16 வயதானவராக இருந்தபோது முதல் தடவையாக மேற்படி 8 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. மேற்படி சிறுவனுக்கு 10 வயதாகும்வரை 50 தடவைகள் அச்சிறுவனுடன் லொரென் மொரிஸ் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக மேற்படி யுவதி உள்ளார். அதேவேளை குறித்த ;சிறுவனுக்கு தற்போது 14 வயதாகிறது. மேற்படி யுவதியின் செயற்பாடுகள் குறித்து பாடசாலையில் அச்சிறுவன் மற்றவர்களிடம் தெரிவித்ததையடுத்தே மேற்படி விடயம் அண்மையில் அம்பலமாகியது.
அதையடுத்து கடந்த வருடம் மார்ச் மாதம் தாம் விசாரணைகளை ஆரம்பித்ததாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வோர்செஸ்டர் நீதிமன்றில் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் லொரென் மொரிஸுக்கு நீதிபதி இரு வருடகால சிறைத்தண்டனை விதித்தார்.
ஏனினும் லொரென் மொரிஸ் தனது நடவடிக்கை தவறு என உணர்ந்ததாலும் அச்சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டதாலும் ஒரு வருடகாலத்தின்பின் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என நீதிபதி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment