உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

FACEBOOK கணக்குகளை HACK செய்தற்கான மென்பொருள்

என்ன நண்பர்களே தலைப்பை பார்த்தவுடன் மிக ஆர்வத்துடன் வந்தீர்களா? இது போன்ற தலைப்பிலே ஏராளமான போலி கட்டுரைகள்,விளம்பரங்கள் இணையத்திலே உலா வருகின்றன. நம்மில் பல பேருக்கு இது உண்மையா? நம்பலாமா என்ற ஒரு சந்தேகம் வர கூடும் .

ஆனால் ஒரு தடவை முயற்சி பண்ணி தான் பார்ப்போமே என்று கால் வைத்து மாட்டி கொள்பவர்கள் தான் அதிகம். இது போன்ற விளம்பரங்களின் முக்கிய நோக்கம் இரண்டே இரண்டு தான்

  • ஒன்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் முகப்புத்தக கணக்கை ஊடுருவுவது
  • மற்றையது பணம் பறிக்கும் நோக்கம் தான்
முதலில் ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் Facebook என்பது நூற்றுக்கணக்கான பொறியியல் வல்லுனர்களின் கட்டுபாட்டில் இயங்கும் ஒரு தளம் அதனை ஒரு சாதாரண மென்பொருள் கொண்டு ஊடுருவுவது என்பது இயலாத காரியம். 

இது போன்ற லிங்க் அல்லது விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்


0 கருத்துகள்: