விசித்திர தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த கொடூரம் - படங்களுடன்
விசித்திரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டின் கிழக்கு ஜகார்த்தாவில் பின்தங்கிய கிராமத்தில் வசித்து வந்த செரோடின் (46) என்ற பெண்ணுக்கு விசித்திரமான தோல் நோய் ஏற்பட்டு உடல் முழுவதும் சிறு சிறு கட்டிகளுடனும் முகத்தில் சதை வளர்ந்தும் காணப்பட்டார்.
நான்கு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த மூன்று வருடங்களாக இந்நோயினால் அவதிப்படுகிறார்.
இந்த நோய் ஏனையோருக்கும் தொற்றக்கூடும் என்ற அச்சத்தில் அவரை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்க தீர்மானித்ததால் அப்பெண் பெரும் கவலையடைந்துள்ளார்.
தனது கிராமத்தில் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ளமையினால் மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment