உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட முனைப்புடன் செயற்பட்டேன் - சந்திரிக்கா



தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்  சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட முனைப்புடன் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
 
பெங்களூர் வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
 
எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டமென்றே வலியுறுத்தினேன்.
 
ஆனால் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதனை புலிகள் விரும்பவில்லை.
 
இதேவேளை சர்வதேச மத்தியஸ்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்றும் கோரினேன்.
 
இந்நிலையில் தமது உயிருக்கு விடுதலைப் புலிகளால்அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.
தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்னதாகவும், அதன் பின்னரும் புலிகள் என் உயிரை காவு கொள்ள முயற்சித்தனர்.
 
ஆனால் நான் ஆரம்பித்து வைத்த வைத்தியசாலைகளில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
யுத்த வலயத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும், சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஒரே நேரத்தில்முன்னெடுத்து வந்தேன் என்றார்.

0 கருத்துகள்: