உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

ஜனாதிபதியின் தலைமையில்



பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த எட்டு செயற்குழு நாடுகளுக்கு  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமை தாங்கவுள்ளார்.

பொது நலவாய நாடுகளின் “2915 இன் பின்னர் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுடன்” அந்த செயல்குழு இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


      ஜனாதிபதியுடன் அவுஸ்ரேலியாவின் அந்தனி எபோட், சைப்பிரஸின் நிக்கோஸ் எனாஸ்டசியேட்ஸ், கிரேனடாவின் கலாநிதி கீச் மிச்சேல், சிராலியோனின் ஏனஸ் பேய் கொரோமா, டெங்கோவின் சியாலி அட்டோன் கோ டுய்வக்காயோ பிரபு மற்றும் டன்சானியாவின் ஜேகாயா கில் வெட்டி ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.


இந்த குழுவில் பங்களாதேஸ் பிரமதர் சேக் ஹசினாவையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஸ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


                  கடந்த நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெற்ற பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இடம்பெற்ற மாநாட்டை அடுத்து, பொது நலவாய நாடுகள் “2915 இன் பின்னர் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுடன்”  இணைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய பொதுநலவாய நாடுகளின் பரிந்துரைகள், ஐக்கிய நாடுகள் சபையின் 69வது அமைர்வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: