உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

கிரிக்கெட் வீரர் அஷாருதீன் வாழ்க்கை பொலிவூட் திரைப்படமாகிறது

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் தலைவரான மொஹம்மட் அஷாருதீனின் வாழ்க்கையை திரைப்படமாக்கவுள்ளார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.

 'அதிகமாக நேசித்த தாத்தாவின் இறப்பு, கிரிக்கெட்டில் அறிமுகம், 17 வயதில் 3 சதங்கள், 9 வருடங்கள் இந்திய கிரிக்கெட் தலைமைப் பதவி, கிரிக்கெட் விளையாட தடை, முதல் மனைவி நோரினுடான விவாகரத்து, 2 ஆவது மனிவி சங்கீதா பிஜிலானியுடனான பிரிவு, வீதி விபத்தில் 19 வயதான மகன் அயாஸின் மரணம் என அனைத்தையும் பார்த்துள்ளார் அஷாருதீன்.

அவர் பாதிக்கப்பட்டவர், வெற்றியாளர் மற்றும் சம்பியன். அற்புதமான வாழ்க்கையை முன்னெடுத்தள்ளாh. ஆனால் அவை பரிபூரணமாக காட்சிப்படுத்தப்படவில்லை. அஷாருத்தீன் மன ரீதியாக திடமானவர் அத்துடன் ஸ்டைலானவர்' என தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெரிவித்துள்ளார்.

அஷாருதீனின் வாழ்க்கையை படமாக்கும் உரிமையை தற்போது ஏக்தா கபூரே பெற்றுள்ளார்.

 ஏக்தா கபூரிடம் கேட்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

'கிரிக்கெட்டில் பல்வேறு ஜம்பவான் உள்ளனர். ஏன் அஷாருதீனை மையமாகக்கொண்டு படம் எடுக்கப்போகிறீர்கள் என ஏக்தா கபூரிடம் கேட்டபோது, எனது தந்தை ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். அவருக்கு கிரிக்கெட்டின் கடவுள் அஷாருதீன். எனது படங்களில் ஆர்வம் கொள்ளாத அவர் அஷாருதீனின் வாழ்க்கைப் படத்தில் ஆர்வம் காட்டுகிறார்.

அஷாருதீன் எனது அம்மாவைப் போல கும்ப ராசிக்காரர் மற்றும் 8 ஆம் இலக்கத்துக்குரியவர். அஷாருதீன் போலவே எனது தாயும் திடமானவர். 

தனது வாழ்க்கையில் மைதானத்துக்கு உள்ளேயும் வெளியிலும் தலைவராக வாழ்ந்துள்ளார். வாழ்முழுவதும் தலைநிமிர்ந்து வாழும் சின்னமாக அஷாருதீன் வாழ்க்கை கூறப்பட வேண்டிதொன்று' என்றார் ஏக்தா கபூர்.

கிரிக்கெட்டில் பல்வேறு ஜம்பவான் உள்ளனர். ஏன் அஷாருதீனை மையமாகக்கொண்டு படம் எடுக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளாh ஏக்தா கபூர்.

நாளை 51 ஆவது பிறந்தாளைக் கொண்டாடவுள்ள அஷாருதீன் படம் குறித்து கூறுகையில், 'எனக்கு மிக மகிழ்ச்சி. ஆரம்பத்தில் நான் இதனை விருப்பவில்லை. ஆனால் மக்கள் எனது வாழ்கையை உணர வேண்டும் என உணர்ந்தேன. ஏற்ற இறக்கங்கள் மற்றும் கடின உழைப்புடன் நான் வாழ்ந்துள்ளேன். எனது வாழ்க்கை படமாக்குவதற்கு ஒரு வருடம் வரையில் யோசித்துவிட்டு ஒப்புக்கொண்டேன்' என்றார்.
 

0 கருத்துகள்: