உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

பரபரப்பான போட்டியில் 2 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

பங்களாதேஷுடனான பரபரப்பான முதலாவது இருபது 20 போட்டியில் இலங்கை 2 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. வெற்றியின் விளிம்புக்கு வந்து தோல்வியடைந்தது பங்களாதேஷ்.


இன்று பங்களாதேஷின் சிட்டக்கொங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடு;பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

குசால் ஜனித் பெரேரா அதிரடியாக 44 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்றார். குசால் ஆட்டமிழக்க இலங்கை அணி ஓட்டங்களைக் குவிக்க தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டில்ஷால் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டடமிழந்தார்.

பின்வரிசை வீரரான குலசேகர 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 21 பந்துகளில் 31 ஓட்டங்களைக் குவித்து ஓட்ட எண்ணிக்கை உயர்த்தினார்.

பந்துவீச்சில் ஷகீப் அல்ஹசன், அரபாத் ஸன்னி மற்றும் மஷ்ரபி மோர்தஷா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக் நெருக்கடியினை ஏற்படுத்தியது. ஆரம்ப வீரர்களான தமீம் இக்பால் (30) மற்றும் ஷம்ஷுர் ரஹ்மான் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

ஷகீப் அல் ஹசன் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து நடுவரிசை வீரர்கள் விரைவாக வெளியே பங்களாதேஷ் இக்கட்டா நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனாலும் இறுதுpவரையில் நம்பிக்கையுடன் ஆடிய மொமினுல் ஹக் 58 ஓட்டங்களுடன் போட்டியின் இறுதிப் பந்தில் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழக்;க இலங்கை 2 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

குலசேகர, பெரேரா தலா 2 விக்கெட்களையும் மலிங்க, மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனா குசால் பெரேரா தெரிவானார். தொடரின் 2 ஆவது போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்: