நூதனசாலையில் திடீரென ஏற்பட்ட பாரிய புதைகுழி - 13 கோடி ரூபா பெறுமதியான 8 அரியவகை கார்கள் புதையுண்டது
நூதனசாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய புதைகுழியில் அரியவகையான 8 கார்கள் புதையுண்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்திலுள்ள கொர்வெட்டி தேசிய நூதனசாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
1962 black Corvette, 1984 PPG pace car, 1992 white 1 millionth Corvette, 1993 ruby red 40th anniversary Corvette, 1993 ZR-1 Spyder, 2001 Mallett Hammer Z06 Corvette, 2009 white 1.5 millionth Corvette, 2009 ZR1 "Blue Devil" ஆகிய கார்களே புதையுண்டுள்ளது.
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் டொலர்கள் (சுமார் 13 கோடி ரூபா) எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புதைகுழி ஏற்பட்ட பகுதி மூடப்பட்டு அங்கிருந்து வாகனங்களும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற புதைகுழிகள் ஏற்படுத்துவற்கான வாய்ப்புள்ளதாக எனவும் ஆராயப்படுகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 வருட பூர்த்தியை கொர்வெட்டி நூதனசாலை கொண்டாடும் ஏற்பாடுகள் நடைபெறும் நிலையிலே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து நூதனசாலையின் பேச்சார் கற்றீ ப்ரஸிநெல்லி கூறுகையில், புதையுண்ட கார்களில் 6 கார்கள் நூதனசாலைக்குச் சொந்தமானது. 1993 ZR-1 Spyder, 2009 ZR1 Blue Devil கார்கள் கடனுக்கு வாங்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment