உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

நெதர்லாந்துடனான போட்டியில் தென் ஆபிரிக்கா போராடி வெற்றி

தெதர்லாந்து - தென் ஆபிரிக்கா அணிகளிடையிலான உலக இருபது20 கிரிக்கெட் தொடரின் குழு 1இற்கான பரபரப்பான போட்டியில் தென் ஆபிரிக்கா 6 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
Imran Tahir's 4 for 21 helped South Africa shut out Netherlands for a tense, six-run win in Chittagong


சித்தகொங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களைப் பெற்றது. ஹஸிம் அம்லா 22 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயற்பட்ட நெதர்லாந்து அணியின் அஹ்ஸன் மலிக் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களைம் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

Lonwabo Tsotsobe reacts after being hit for a six by Stephan Myburgh, Netherlands v South Africa, World T20, Group 1, Chittagong, March 27, 2014

10.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிலிருந்தது. பின்னர் அடுத்தடுத்து தெநதர்லாந்தின் விக்கெட்கள் வீழ்த்தப்பட வெற்றியின் வளிம்பில் தோல்வியடைந்தது.

ஆரம்ப வீரரான மைபேர்க் மீண்டுமொருமுறை அதிரடியாக துடுப்பெடுத்தாடி 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். 

தென் ஆபிரிக்கா அணி சார்பாக இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் ஆட்ட நாயகனாகவும் இவரே தெரிவானார்.

0 கருத்துகள்: