வீதி சட்ட திட்டங்களை மீறிய 138 பேருக்கு எதிராக நடவடிக்கை
வீதி சட்ட திட்டங்களை மீறிய 138 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பதுளை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - பண்டாரவளை வீதியில் மேற்கொண்ட வாகன சோதனையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பதின்மூன்று பேரை கைது செய்துள்ள அதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனை தொடர்பாக தேடப்பட்ட இருவர் உள்ளிட்ட வீதி ஒழுங்குகளையும், வீதி சட்டதிட்டங்களையும் மீறி வாகனங்கள் செலுத்திய நூற்றி முப்பத்தி எட்டுப் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பதுளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment